வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் ‘வால் பூ’




“வாழ்வின் முக்கிய தேவைகளில் வால்பூவா?” இது உடனடியாக எழக் கூடியகேள்வியே. ஆனால் உங்கள் வாழ்வில் ஒரு நாளாவது வால் பூ உங்கள் கையில்இருந்திருக்கும். திருமண விழா, பாடசாலை விழா, மரண நிகழ்வு என்று உங்கள்வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் வால் பூவின் பங்களிப்பு இருந்திருக்கும். நிச்சயமாக இல்லை என்று மறுப்பவர்களுக்கு நான் ஓர் உண்மையைக் கூறவேண்டும். ‘அந்தூரியம்என்று நீங்கள் ஆசையுடன் அழைக்கும் பூவின் ஆங்கிலபெயர்ரெயில் பிளவர்’ (tail flower).

“ஆ…! இது தான் வால் பூவா? என்று வாயைப் பிளக்காதீங்க. அந்தூரியம் என்பதுகிரேக்க மொழிச் சொல். அதன் ஆங்கில பதம் ‘ரெயில் பிளவர்’ என்றால் நம் தூயதமிழில் ‘வால் பூ’ என்பது தானே? இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் வாழ்வின்முக்கிய நிகழ்வுகளில் இதன் பங்களிப்பு இருந்திருக்கிறதல்லவா?

இந்த வால்பூவை நாளாந்த வாழ்வில் கண்டிருப்பினும் இதைப் பற்றி எத்தனைபேருக்கு தெரியும்? இந்த பூ பற்றி சில தகவல்கள்:
இன்று நம் நாட்டில் மிகுந்த விற்பனையை கொண்ட மலர்களில் இதுவும் ஒன்று. இன்று சாதாரணமாக பல வீடுகளை அலங்கரிக்க பயன்படுகிறது. அதிகமானஇடவசதி குறைந்த இடங்களிலும் சூரியஒளியை அதிகம் பெற முடியாதஇடங்களிலும் வைத்துப் பாராமரிக்க கூடியவாறு இருப்பதே அதற்குகாரணமாகும். இம்மலரிற்கு நிழல் அவசியமாக இருப்பதால் அடுக்குமாடி புறாக்கூட்டு வீடுகளிலும் இவ்வால் பூச்செடியை வளர்க்க முடிகிறது. இருப்பினும்பணத்தை தரக் கூடிய தொழில் ரீதியான வளர்ப்புக்கு மத்திய மலைநாடு மற்றும்ஈரவலயங்களே சிறந்த இடமாகவுள்ளது.

இந்தஅந்தூரியம்கன்றுகளாகவும் மலர்களாகவும் உள்ளுர் சந்தைகளில்பெரிதும் காணப்படுகின்றன. ஆனால் இவ்வாறு உள்ளுர் சந்தைகளில் விற்பதன்மூலம் உற்பத்தியாளர்கள் குறைந்தளவு வருமானமே ஈட்ட முடியும். இதனால்அந்தூரியத்தின் ஏற்றுமதியை அதிகரிப்பதில் அரசாங்கம் பெரிதும் கவனம்செலுத்தி வருகிறது. ¼ ஏக்கர் நிலத்தில் அந்தூரியத்தை தொடர்ந்து 5 வருடங்கள்பயிரிட்டு விற்பனை செய்வதன் மூலம் ஏறத்தாழ 3 லட்சம் ரூபா இலாபம் பெறமுடியுமென போராதனை அரச தாவரவியல் பூங்காவின் 5 வருடத்திற்கானமதிப்பீடு தெரிவிக்கின்றது. அந்நிலத்தில் பயிர்ச் செய்கையின் போது வருடம்ஒன்றிற்கு 35,000 பூக்களளவில் அறுவடை செய்ய முடியும் எனவும்கணக்கிடப்பட்டுள்ளது.

பணப்பயிராய் அலங்கரிக்கக் கூடிய அந்தூரியம் பயிர்ச்செய்கை பயனள்ளவகையில் அமைய வேண்டும் எனின் அதற்குரிய போதுமான இடவசதி தேவைஎன்பது இதிலுள்ள பாரிய குறைபாடாய் காணப்படுகிறது. ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகளை வளர்ப்பதே வருமானத்தை தரும் வழி எனவிவசாயத் திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு செடியிலும் வருடத்துக்கு சராசரியாக 6 மலர்களை பெறலாம் எனவும்இதனால் அதிக இடவசதி உடையவர்களுக்கே பயிடும் ஆலோசனைவழங்கப்படுவதாகவும் அவ்வாறான அதிக மலர் செய்கை இல்லாவிடின்இலாபமீட்ட முடியாது எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன. இதன்படி 10,000 செடிகளின் மூலம் ஏறத்தாழ 60,000 மலர்களைப் பெற முடியும்

இனி அதன் விற்பனை பற்றி பார்ப்பின்,
இம்மலர்கள் உள்நாட்டில் விற்கப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்யப்படுவது தெரிந்ததே.

பொதுவாக இதய வடிவில் இதழ்களைக் கொண்டுள்ள இம்மலர்கள் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, பொன்மஞ்சள், பச்சை போன்ற பல நிறங்களில்காணப்படுகிறது. இவற்றின் அளவுகளையும் தரத்தையும் பொறுத்து கேள்விஅமைந்துள்ளது.

இதன்படி பளபளப்பான இதழ்களை உடைய மலர்களுக்கு கேள்வி அதிகமாகஉள்ளது. அத்துடன் இதழும் பூவும் ஓரே நீளமுடைய மலர்ளே பெரிதும்விரும்பப்படுகின்றன.

அவ்வாறான மலர்கள் அழகானவை என வாடிக்கையாளர்கள் கருதுவதால்அவற்றையே பெரிதும் விரும்புகின்றனர் என அந்தூரியம் விற்பனையாளர்கள்கூறுகின்றனர். இம்மலரொன்று உள்ளுர் விற்பனை நிலையங்களில் 5 ரூபாய்முதல் காலத்திற்கேற்ற வகையில் 15 ரூபாய் வரை விற்க முடியும் எனவும்தெரிவிக்கின்றனர்.

பொதுவாக இம்மலர்கள் 4 – 6 கிழமைகள் வரையில் வாடாமல் இருப்பதனால்நீண்டநாள் அலங்கார வேலைகளுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. எனவே நீண்டநாள் அலங்கார வேலைகளுக்கு இவை பெரிதும் விரும்பப்படுகின்றன. அத்துடன்ஏனைய மலர்களிலும் விலை குறைந்தாககவுள்ளது. இவற்றினை ஏற்றுமதிசெய்யும் போது ஒரு பூ 30 – 35 ரூபாய் வரை பெறுமதி உடையதாகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கு கொடுக்கும் பூங்கொத்து முதல் திருமண மண்டபஅலங்காரம், ஏனைய பல வைபவ அலங்காரங்கள் எனத் தொடர்ந்து மரணஅஞ்சலிக்கு மலர்வளையம் வரை அத்தனைக்கு பயன்படுகிறது.

என்ன உங்கள் வீட்டில் அடக்கமாய் நிற்கும் பணப்பயிரை வியப்புடன்பார்க்கிறீர்களா? ‘நிறை குடம் தளம்பாதுஎன்பது எத்தனை உண்மை.

கருத்துகள் இல்லை: