வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

மரண வாசலில் ஓர் ஞானம்.


நாளை அந்த வீட்டில் பெரியதொரு விருந்துபச்சாரம் நடக்கப் போகின்றது. இது அவன் தன் நண்பர்களுக்குகொடுக்கப் போகும் 50ஆவது விருந்து. கடந்த நான்குமாதத்திற்குள் 49 நாள் விருந்து வைப்பதென்றால் பெரியவிசயமல்லவா? அதுவும் பொருட்களின் விலையுயர்வால் நாடே வாடிப் போயிருக்கும் காலத்தில்!

அதை நினைக்கும் போது அவனுக்குள் உள்ளுர மகிழ்ச்சியாக இருந்தது. தன்நண்பர்கள் மத்தியில் தன் மதிப்பு உயர்ந்து நிற்பதை நினைக்கையில் ஒருபெருமை. கடந்த அந்த நான்கு மாதங்களில் நண்பர்கள் மத்தியில் ஹீரோவேஅவன்தானே!

நாளைக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்ய வேண்டுமே… வேக வேகமாக வீட்டை விட்டுக் கிளம்பினான். வெளியே கும்மிருட்டு. நேற்றுத்தான் அமாவாசை முடிந்திருந்தது. அந்த இருளை கூட பொருட்படுத்தாமல் தன் இலக்கை நோக்கி வேகமாக நடந்தான். கடைகள்எல்லாம் மூடப்பட்டிருந்தன. நிம்மதிப் பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்துவெளிவந்தது. சூழ்நிலை அவன் எதிர்பார்த்தது போலவே அமைந்திருந்தமை அவனுக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கடை வீதிகளைக் கடந்து அந்த வீட்டை அடைந்த போது அதுவும் இருளிலேமூழ்கிக் கிடந்தது. சத்தம் செய்யாமல் படலையைத் திறந்து உள்ளேநுழைந்தான்.

அதோ அவன் தேடி வந்த பொக்கிஷம். அந்தக் கூட்டினுள்ளே கோழிகள்எல்லாம் தூக்கத்தில் இருந்தன போலும். சத்தம் எதுவுமில்லை. அவற்றில் நாளைத் தேவைக்கு மூன்றையாவது தூக்கிக் கொண்டு போக வேண்டும்.

மறுபடி ஒரு மின்னல் சந்தோஷம். இது அவனது வெற்றிகரமானவெள்ளிவிழா திருட்டாக அமையப் போகிறது. கோழிக் கூட்டினுள்உற்சாகமாக நுழைந்தான். காலில் ஏதோ பட்டு உச்சி முதல் பாதம் வரை ஷாக் அடித்தது. அது பல நாள் திருடனை பிடிப்பற்காய் வீட்டுக்காரர் வைத்திருந்த மின்சாரக் கம்பியை மிதித்து விட்டதால்

துடி துடித்து இறக்கும் தறுவாயில் அந்த புத்தனுக்கு ஓர் ஞானம் பிறக்கிறது. என்னை ஹீரோவாக்கி 49 தடவை கோழி புரியாணியைச் சுவைத்த வாயால் நாளை காறி உமிழப் போகிறார்கள்கோழித் திருடன்என என் பிணத்தில். மித்திர துரோகிகள்! இதுதான் உலகம்!

1 கருத்து:

த.அகிலன் சொன்னது…

தயவு செய்து ஒவ்வொரு கட்டுரையோ கதையோ இடும்போதும் ஒவ்வொரு கலரில் எழுத்துக்கெளைப் போடுவதை தவிர்க்கவும் .. (மனசுக்குப் பட்டது)