வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

எங்கே என் வைரத்தோடு!


இன்னமும் முப்பது நிமிசத்தில லசி வந்திடுவாள். இன்னமும் என் கூந்தல் ஈரமாயே இருக்கு. இதை கைய வைச்சு ரெடியாக லேட்டாயிடும். "என்னை மாதிரி 'பொப் கட்' வெட்டிக்கோ. இல்லன்னா இதோட போராடியே வீணாப் போயிடுவ. ஒரு இடத்துக்கும் டைமுக்கு போக முடியா!" என்று எத்தனையோ தடவ எச்சரித்திருக்கிறாள்.

இண்டைக்கு லேட்டான லசி என்னைத் திட்டி தீர்த்திடுவாள். திட்டினாக் கூட பரவாயில்ல! என்னோட ஸ்பெஷல் ஹோட்டல் டினரும் இல்லாம போயிடும். ஒரு மாதிரியா வேக வேகமாக ரெடியயிட்டன். இனி தோட்டை போடுறது மட்டும்தான் பாக்கி. ஆனா..... லசி ஆசையா வாங்கித் தந்த வைரத் தோட்டை காணல!

ஒரு வேள லசி எடுத்திருப்பளோ? சீ! நிச்சயமா இருக்காது. அவள் பிளாஸ்ரிக், சில்வர் என்று விதவிதமா தன்னோட உடுப்புக்கு மச்சிங்கா போடுவாளே தவிர இந்த மாதிரி நகைகள் பட்டிக்காடு மொடல்ன்ணு அவளுக்கு பிடிக்காது. அப்ப எங்க போயிருக்கும்?

ஐயோ! ஹாலிங் பெல் சத்தம் கேட்குதே! லசி வந்திட்டாள். வீடு முழுதும் அலசியும் அவள் அந்த பழாப் போன தோடு கிடைக்கல. இப்ப என்ன நடக்க போகுதோ! மனசு பட படக்க கதவை மெதுவாக திறக்கிறேன்.

ஹய்யா! என் வைரத் தோடு! என்ன ஆச்சர்யம்? என் ஆசை மனைவி லசி எனும் லட்சுமி காதில மின்னுது! இன்னைக்கு நான் சமைக்க தேவயில்ல!

கருத்துகள் இல்லை: