வியாழன், 4 மார்ச், 2010

தமிழ் அரச 'கறும' மொழியா?



“நங்ப்ங்ஸ்ரீற் ஹ்ர்ன்ழ் ப்ஹ்ஹஞ்ங்” தமிழர்களே இக்கூற்றிற்கு அர்த்தம் புரியவில்லையா? இதுவும் தமிழ்தான். இலங்கையின் அரசாங்க இணையத்தளமொன்றில் ‘select your language’ என்ற வசனத்திற்கான தமிழாக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதன் அர்த்தம் ‘உங்கள் மொழி
யைத் தெரிவு செய்யுங்கள்’ என்பதாகும். இந்தத் தமிழ்க் கொலைக்கு தொழில்நுட்பத் தவறு என்ற போர்வையால் பரிகாரம் செய்யப்பட்டு விடும்.


ஆனால் இதையும் மீறி ‘ல’கர, ‘ழ’கர, ‘ள’கர பேதங்கள், ‘ற’‘ர’, ‘ந’‘ன’‘ண’ பேதங்கள் புரியாது வேறு அர்த்தப்படுத்தலுக்கான சொற்களை தமிழில் திணித்து ஜோராக தமிழ்க் கொலை நடைபெறும். சில நிறுவனங்களில் ‘தமிழ்க் கொலை’ நடைபெறாது, ஒரேயடியாக அதை ஒழித்துக் கட்டியிருப்பார்கள். இப்படி நாளாந்தம், இடத்துக்கிடம் தமிழ்மொழிக்கு சோதனை மேல் சோதனையே.

எமது இலங்கைச் சனநாயகக் குடியரசின் அரசியலமைப்பின்படி சிங்களத்துடன் தமிழும் அரசகரும மொழி. அ
த்துடன் தேசிய மொழியும் கூட. இதனடிப்படையில் இந்த நாட்டில் எந்தவொரு அரச நிர்வாக அலுவல்களையும் இவ்விரு மொழிகளில் ஒன்றின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அத்தோடு அந்த நிர்வாகங்களுக்கு வழங்க வேண்டிய அல்லது அங்கிருந்து பெற வேண்டிய ஆவணங்களை இவ்விரு தேசிய மொழிகளில் விரும்பிய அல்லது அறிந்த மொழியில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் நடைமுறையில் அவற்றின் சாத்தியப்பாடு கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இந்நாட்டின் யாப்பின்படி இணைப்பு மொழியாகவுள்ள ஆங்கிலம் பயன்படுத்தப்படும் அளவிற்குக் கூட தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் பயன்படுத்தப்படுவதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விடயங்கள் தொடர்பான ஆவ
ணங்களும் சிங்கள மொழியில் இருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு தேவை என்ற நிலையே காணப்படுகிறது.

இந்த அரசகரும மொழிக் கொள்கை சட்டத்திலுள்ள போதிலும் நடைமுறையில் சாத்தியப்படாமைக்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்களில் சுமார் 9 சதவீதமானவர்களே தமிழ் மொழி பேசுவோர். இக்குறுகிய தொகையைக் கொண்டு அரசகரும மொழிக் கொள்கையை அமுலாக்க முடியாது. இதைவிடவும் இரண்டாம் மொழியறிவுடையோர், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றோரின் தொகையும் மிகக் குறைவாகவே உள்ளது. இதைக் கொண்டு மொழிக் கொள்கையைப் பிரகடனப்படுத்தி தமிழ் மொழிக்கு இடமளிப்பது சிரமமே.

இந்தப் பிரச்சனைகளை, சிக்கல்களை குறைக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை அரசகரும மொழிகள் ஆணைக்குழு மேற்கொண்டவறே உள்ளது. பயிற்சிப்பட்டறைகள், பயிற்சி வகுப்புக்கள் எனப் பல்வேறு திட்டங்களை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டது.

இதன்போது, ‘பொலிஸாருக்கான உரையாடல்கள்’, ‘பேச்சுத் தமிழில் 40 மணித்தியால அடிப்படைப் பயிற்சி’, ‘மொழி வளத் தே
வைகளின் கணிப்பீடு’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நூல்களும், நூல் வெளியீட்டுக்கான நோக்கமும் மிக உன்னதமானவை. ஒரு சாதாரண குடிமகனின் தேவையை ஒரு அரச அலுவலகர், அக்குடிமகனின் சொந்த மொழியிலேயே கேட்டறிந்து துல்லியமான தீர்வை வழங்கலாம். அந்த வகையில் ‘பொலிஸாருக்கான உரையாடல்கள்’ எனும் நூல் 3 மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. எல்லைப்பிணக்கு, கொலை, தாக்குதல், மிரட்டல், கற்பழிப்பு, வாகன விபத்து, மோசடி என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டவரின் சுயமொழியில் விசாரணையை மேற்கொள்ளலாமென்பதைக் கற்றுத் தருகின்றது. அதேபோன்றே, ‘பேச்சுத் தமிழில் 40 மணித்தியால அடிப்படைப் பயிற்சி’ நூலும் ஒவ்வொரு பொது நிறுவனங்களிலும் தமிழில் பேசுவதற்கான அடிப்படை வழிகாட்டியாய் அமைந்துள்ளது.

இன்றைய சூழ்நிலையில் இவ்வாறான முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியன. மூன்று தசாப்த கால யுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்த யுத்தத்திற்கு மொழிப் பிரச்சனையும் ஒரு காரணமென்ற வகையில், இத்தருணத்தில் அதற்குத் தீர்வு காண வேண்டியது மிக அவசியமானது.

இத்தீர்வை வழங்கும் வகையில் மொழிக் கொள்கை அமுலாக்கலுக்காகப் பாடுபடும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் நிகழ்வுகள் அனேகமாக இணைப்பு மொழியிலேயே நடத்தப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் பல பொது நிகழ்வுகள் சிங்களம் அல்லது ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும். ஆங்கில
மொழி மூலமாக இடம்பெறும் நிகழ்வுகளுக்கு அநேகமாக சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கப்படும். இறுதிக் கட்ட விவாத அல்லது கலந்துரையாடலின் போது மட்டும் மூன்று மொழிகளுக்கும் இடமளிக்கப்படும். ஆனால் அரசகரும மொழி ஆணைக்குழுவின் அநேக நிகழ்வுகளில் தேசிய மொழியை விட இணைப்பு மொழியே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்பதை உரியவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

இதை ஒருபுறத்தில் விட்டுவிட்டு மொழி அமுலாக்கல் கொள்கை முயற்சியின் இன்னொரு படிக்கல்லான அரசகரும மொழிகள் கொள்கைச் செயற்படுத்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல.07ஃ2007 இனைப் பார்க்கலாம் இதன்படி
, 2007-07-01ஆம் திகதி முதல் அரசாங்க சேவை அல்லது மாகாண சேவையில் சேர்த்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்கள் அனைவரும் சேவையில் சேரும் அரச கரும மொழிக்கு மேலதிகமாக மற்றைய அரசகரும மொழியில், சேவையில் சேர்ந்;து 5 வருடங்களுள் தேர்ச்சி பெற வேண்டும். இச்சுற்றறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படின் அரசநிறுவனங்களில் தமது தேவைகளை நிறைவேற்றச் செல்லும் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் தமிழ்க் கொலைகளுக்கும் ஓரளவுக்கு விடிவு கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

இவ்வாறான சில தீர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதேவேளை நாமும் நம்மாலான சில முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். நம்முள் சிலரிடம் “நாம் ஏன் சிங்களம் கற்க வேண்டும்? எனது தாய்மொழியையே நான் பேசுவேன்.” என்ற தவறான எண்ணம் உள்ளது. இந்த எண்ணக்கரு களையப்பட வேண்டிய ஒன்று. இரண்டாம் மொழிக் கல்வி என்பது அனைவருக்குமே அவசியமானதென்பதை நாம் உணர வேண்டும். எம்மிடையே பூரணமான இரண்டாம் மொழியறிவு இருந்தால் மட்டுமே எமது தாய்மொழியை நம்மால் வளர்க்க முடியும்.

கருத்துகள் இல்லை: