செவ்வாய், 10 நவம்பர், 2009

பெண்ணாகையால்...



நின்றேன்...
"கனவு காணாதே"

நடந்தேன்...
"குனிந்து நட"

இருந்தேன்...
"ஒடுங்கி இரு"


படுத்தேன்...
"சரிந்து படு"

சிங்காரிதேன்...
"யாரை மயக்க"

கலைத்தேன்...
"மூளியாய் நிற்காதே"

பேசினேன்...
"அதிகம் பேசாதே"

மௌனியானேன்...
"ஊமையா நீ?"

அழுதேன்....
"குடும்பத்துக்கு தரித்திரம்"

சிரித்தேன்...
"பெண்ணுக்கு ஆகாது"

என் அசைவுகள் அத்தனையும்
தவறானதேன்?
"நீ பெண்"

3 கருத்துகள்:

Krishna சொன்னது…

ரசித்தேன் உங்கள் பெண்ணிய கருத்துக்களை.....
தொடரட்டும் எழுத்துக்கள்..

இலக்கியா சொன்னது…

நன்றி... ஆனால் எம் வேதனைகள்.. வலிகளை வார்த்தைகளால் புலம்புவது பெண்ணியமா? ஆம் என்றால் இது பெண்ணிய கருத்துகள்.

Krishna சொன்னது…

21ம் நூற்றாண்டு பெண்களும் இவ்வாறு தான் உள்ளார்களா என்பதில் சிறு சந்தேகமே....! வெகு சிலரை தவிர...